டெல்லியிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சமீபத்தில், டெல்லியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர், திடீரென தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதையடுத்து அந்தப் பயணிக்கு விமானப் பணிப்பெண்கள் அவசர உதவிகள் செய்தனர். அப்போது பயணிகளில் 5 பேர் எழுந்து வந்தனர். தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள், உடல்நலக்குறைவு என்று கூறப்பட்ட பயணியைச் சோதித்தனர்.

பிறகு அவர்கள் 5 பேரும் விமான கேப்டனை வரச் சொல்லுங்கள் அல்லது கேப்டன் அறைக்குள் அனுமதியுங்கள் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள், 5 பேரையும் விமானி அறைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இதற்கிடையே மருத்துவர்கள் என்று கூறிய 5 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பயணிக்கு கேப்டன் அறைக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறியபடியே இருந்தனர். ஆனால் கேப்டன் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

விமானம் லண்டன் சென்று சேர்ந்ததும் 5 பேரும் அவசரம் அவசரமாக வெளியேறிச் சென்று விட்டனர். அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த விமானப் பணிப்பெண்கள் இதுபற்றி, உடனடியாக விமான நிறுவனத்திடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த 5 பேர்கள் பற்றி ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை செய்தது. அப்போது அவர்கள் 5 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டபோது அவை போலி என்று தெரிய வந்தது.

அதுபோல உடல் நலக்குறைவு என்று கூறிய பயணிக்கு உண்மையிலேயே உடல் நலக்குறைவு ஏற்படவில்லை என்றும், அவர் விமானப் பணிப்பெண்களை ஏமாற்ற நடித்து இருப்பதும் தெரிந்தது. அவரும் போலி தொடர்பு எண் கொடுத்திருந்தார். எனவே அவர்கள் 6 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் ஏர் இந்தியா விமானத்தை நடுவானில் கடத்திச் சென்று நாசவேலையில் ஈடுபட அவர்கள் 6 பேரும் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. யாரும் சந்தேகப்படாதபடி செயல்பட்டு தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி நாசகர செயலில் ஈடுபட முயன்று இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்துதுறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பயணிகள் யாரையும் கேப்டன் அறைக்குள் அனுமதித்து விடாதீர்கள். விதிகளை முழுமையாக கடைபிடியுங்கள். விழிப்போடு இருங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தை கடத்த முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள்?விஸ்வரூபம் திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில் சமரசம் செய்து கொள்வதாக தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கமும், ராஜ் கமல் நிறுவனமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு, தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்-சில் வெளியிட நடிகர் கமலஹாசன் முடிவெடுத்தார். அந்த முடிவினால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர் சங்கத்தினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சட்டரீதியான வர்த்தகப் போட்டி முறைகேடுகளை விசாரிக்கும் ஒழுங்குமுறை ஆணையமான இந்திய போட்டி ஆணையத்தில் (காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா) கமல் புகார் அளித்தார்.

அந்தப் புகாரை விசாரணை செய்த இந்தியப் போட்டி ஆணையம், மனுதாரரின் புகாரில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் அதை விசாரணை செய்ய வேண்டும் என போட்டி ஆணையரின் தலைமை இயக்குநருக்கு 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், புகாரை விசாரணை செய்த போட்டி ஆணைய தலைமை இயக்குநர் குழுஇ திரைப்பட வெளியீட்டாளர் சங்கம் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்காமலும், தங்கள் கட்டுப்பாட்டில் திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளதாக, அந்த சங்கத்திற்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் மேல் முறையீடு செய்தது. அதில், கமல் தரப்பும், சங்கத்தின் தரப்பிலும் சமரசம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், பி.ஆர்.சிவக்குமார் ஆகியோர் முன்பு நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு்

மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள சமரசத்தை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இந்தியப் போட்டிகள் ஆணையத்தின் அதிகாரத்துக்குட்பட்டதாகும்.

ஒருவேளை இந்த சமரசத்தை ஏற்றுக் கொண்டால், இருதரப்பினரும் சமரச உடன்படிக்கையை மனுவாக, இந்திய போட்டிகள் ஆணையத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

அந்த சமரச உடன்படிக்கை மனுவை பெயரளவில் ஏற்றுக் கொள்ளாமல், அந்த மனுவையும், தலைமை இயக்குநர் அளித்த அறிக்கையையும் பரிசீலனை செய்து இந்தியப் போட்டி ஆணையம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

விஸ்வரூபம் வழக்கு - சமரசத்துக்கு முன்வந்த கமல்அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்கள் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் என்று பிரிட்டனில் புதிய பிரச்சாரம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டு இருப்பது பல்வேறு ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு காரணமாவதாகவும் உடற்பயிற்சி கூடத்தில் உழைப்பதன் மூலம் கூட அவற்றை சரிசெய்வது சிரமம் என்றும் On Your Feet Britain என்ற பிரிட்டிஷ் நிறுவனம் கூறுகின்றது.

அடிக்கடி எழுந்து நிற்குமாறும் அதிகம் நடக்குமாறும் அலுவலகத்தில் நின்றுகொண்டே கூட்டங்களை நடத்துவது அல்லது நின்றுகொண்டு வேலைபார்க்கக்கூடிய மேசைகளை வைத்திருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது.

அதாவது கைகால்களை அசைக்காமல் சும்மா இருப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சவால் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயநோய், இரண்டாம் வகை நீரிழிவுநோய், புற்றுநோய்கள், உளநலம் பாதிக்கப்படுதல் இப்படி பல பிரச்சனைகளுக்கு உட்கார்ந்துகொண்டே வேலைபார்ப்பது காரணமாவதாக கூறப்படுகின்றது.

நாங்கள் தினசரி சைக்கிளில் தான் வேலைக்கு வருகிறோம், உடலை திடகாத்திரமாக வைத்திருக்கிறோம் என்று கூறுபவர்களைக் கூட நீண்டநேரம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டே வேலைபார்ப்பது பாதிக்கின்றது என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

தொடர்ச்சியாக உட்கார்ந்தே இருப்பதால், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை உடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பில் தாமதம் ஏற்படுகின்றது. அதனால் சர்க்கரையின் அளவுகளையும் ரத்த அழுத்தத்தையும் கொழுப்புச் சத்து துண்டுகளாக்கப்படுவதையும் உடல் கட்டுப்படுத்தும் முறையில் பாதிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகின்றது.

Get Britain Standing மற்றும் the British Heart Foundation (BHF) ஆகிய தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து, 2000 அலுவலக பணியாளர்களிடம் நடத்திய புதிய ஆய்வில், 45 வீதமான பெண்களும் 37 வீதமான ஆண்களும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே வேலைத்தளத்தில் நிற்கின்றனர்.

அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் அலுவலக மேசையிலேயே பகலுணவை முடித்துக்கொள்கின்றனர்.

78 வீதமானவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நாளைக் கடத்துவதாக நினைக்கின்றனர். அதிலும் வேலைத்தளத்தில் அமர்ந்துகொண்டே இருப்பதால் உடலுக்கு தீங்குதான் என்று மூன்றிலிரண்டு பேருக்கு தெரிந்தே இருக்கின்றது.

லிஃப்டுக்குப் பதிலாக படிகளில் நடந்துசெல்வது, நாற்காலியிலிருந்து எழுந்துசென்று பகலுணவை உண்பது, ஒவ்வொரு 30 நிமிடமும் கணினி வேலையிலிருந்து சிறிது ஓய்வு எடுப்பது, தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ பேசிக்கொள்ளாமல் எழுந்துசென்று சக பணியாளர்களுடன் உரையாடுவது போன்ற சிறிசிறு மாற்றங்களின் மூலம் தொடர்ச்சியாக உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க முடியும் என்று Get Britain Standing அமைப்பைச் சேர்ந்த கவின் பிராட்லி கூறுகின்றார்.

அமர்ந்துகொண்டே இருப்பதிலும் பார்க்க எழுந்து நிற்பதன் மூலம் மணிக்கு 50 கலோரிகளை மேலதிகமாக எரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பிரிட்டனில் அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் எழுந்து நின்று, நடந்து திரிந்து, இதயநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கெடுக்கவேண்டும் என்று Get Britain Standing தொண்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

அலுவலகங்களில் உட்கார்ந்து வேலைபார்ப்பது ஆரோக்கியத்துக்கு கேடுகர்நாடக அரசின் புதிய அணைகளால் தமிழகத்தில் 15 மாவட்டங்கள் பாதிக்கும், 5 கோடி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகரில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரியில் மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகள் கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பிற்கு மதிமுக ஆதரவு அளிக்கும். உச்சநீதிமன்றம், கர்நாடகாவில் எந்த விதமான பாசன திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் 11 லட்சம் ஏக்கர் பாசனத்திற்காக இரண்டு அணைகளை கட்ட உள்ளனர். மேலும், ஹேமாவதி, ஏரங்கி, கிருஷ்ணராஜசாகர், கபினியில் 4 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

பெரும் வெள்ளத்தில் வரும் உபரிநீரில் ஒருபோக சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. மேகதாதுவில் 48 டிஎம்சி, ராசி மணலில் 30 டிஎம்சி தண்ணீர் தேக்கலாம். இந்த தண்ணீரை பெங்களூரு, மைசூர் ஆகிய நகரங்களின் குடிநீருக்கு செல்கிறோம் என கர்நாடக அரசு கூறுவது ஏமாற்று வேலை.

இந்த அணைகளால் தமிழகத்தில் 15 மாவட்டங்கள் பாதிக்கும். 5 கோடி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுவர். தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை கொண்டுவரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 7ல் தஞ்சையில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம் என்று வைகோ கூறினார்.

கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 5 கோடி மக்கள் குடிநீரின்றி தவிப்பர் - வைகோஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களாக இருந்த யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.

அரவிந்த் கெஜ்ரிவால் அனைத்து அதிகாரிகளையும் தன் வசமே வைத்துக் கொண்டு சர்வாதிகாரமாக செயல்படுகிறார் என்று இருவரும் குற்றம்சாட்டினர். தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் கடந்த முறை நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். யோகேந்திராவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று மீண்டும் ஆம் ஆத்மி தேசிய செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை தேசிய செயற்குழுவில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதற்கு 200-க்கும் மேற்பட்டோர் வாக்களித்ததால் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களைப் போலவே, யாதவின் ஆதரவாளர்கள் ஆனந்த் குமார், அஜித் ஜா ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

முன்னதாக, தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வெளியில் யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷணும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தாங்கள் நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரசாந்த் பூஷண் கூறும்போது, "தேசிய செயற்குழு கூட்டத்தில் எங்கள் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டமே கேலிக்கூத்தானது. குண்டர்கள் ஆதரவுடன் எங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

ஆம் ஆத்மி கட்சி பொறுப்பிலிருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் நீக்கம்ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக் தனது 12 கோடி டாலர் சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் அறக்கட்டளைக்கு தனது சொத்துக்களை வழங்கிய அமெரிக்க கொடை வள்ளல்களின் பட்டியலில் டிம் குக் (54) இணைந்துள்ளார். ஏற்கனவே, தொழிலதிபர் வாரன் பஃபெட், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இது குறித்து கூறியுள்ள டிம் குக், “நீங்கள் குளத்தில் கூலாங்கல்லாக இருக்க வேண்டுமெனில், மாற்றத்திற்கான சுழல்களை உருவாக்க வேண்டும்” என்றார்.

அவர் தனது மனைவிக்கு 30.2 பில்லியன் டாலரை வழங்கியுள்ளார். அவருடைய மொத்த மதிப்பில் 37 சதவீதமாகும். மேலும், 10 வயது சிறுவனின் கல்லூரி படிப்புக்குப் பிறகு அறக்கட்டளைக்கு செல்லுமாறு திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை, ஆப்பில் இன்சைடர், தி வால் ஸ்ட்ரீட், ஃபார்ச்சூன் உள்ளிட்ட பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஆப்பிள் நிறுவன அதிகாரி டிம் குக் 12 கோடி டாலர் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவுதனது செல்ல மகளை காண முடியாமல் காத்திருந்த கேப்டன் தோனிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டுவிட் செய்துள்ளார், சாக்‌ஷி.

கேப்டன் தோனி மற்றும் சாக்‌ஷி தம்பதிகளுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் சாக்‌ஷி பிப் 6, 2015 அன்று பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். ஆனால் கேப்டன் தோனி சுற்றுப்பயணம் காரணமாக அண்ணிய மண்ணில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தோனியால் தனது செல்ல மகளை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் உலகக் கோப்பையில் கவணம் செலுத்தினார்.

எனினும் உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டதால் தற்போது வீரர்கள் அனைவரும் நாடு திரும்புயுள்ளனர். இந்நிலையில் தனது கணவரை ஆறுதல் அளித்து வரவேற்பது போல டுவிட் செய்துள்ளார் சாக்‌ஷி. அவற்றில் இந்திய அணிக்காக பெருமைப்படுகிறேன், வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்தீர்கள், இறுதியாக என் கணவரை பார்க்கப் போறேன் என கூறப்பட்டுள்ளது.

தோனி குறித்து டுவிட் செய்த சாக்‌ஷிபிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனம் தமிழ், தெலுங்கில் கார்த்தி, நாகார்ஜுனாவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ப்ரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இந்தப் படத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

இதில் நாயகியாக ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து ஸ்ருதி திடீரென விலகினார். அதுபற்றிய செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

ஸ்ருதியின் இந்த விலகலால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர் தரப்பு ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாஸன் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரிடம் கால்ஷீட் பெற்றோம். இப்போது பாதிப் படம் முடிந்த நிலையில், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகிவிட்டது. இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிஹாஸன் செயலால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது. அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் சுருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை ஸ்ருதிஹாஸன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது, அவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவும் கூடாது என்றும், இந்த கிரிமினல் குற்றத்துக்காக அவரை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குடெல்லியில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவிடம் ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி பூசல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஹசாரே, ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நான் ஏன் தலையிட வேண்டும்? எனது புரிதல்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அது என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் நான் ஏன் தலையிட வேண்டும்? - அன்னா ஹசாரேசந்தானம் நாள்களை எண்ணி எடுத்துதான் படங்களுக்கு தருகிறார். ஒரு நாளைக்கு இத்தனை லட்சங்கள் என்றுதான் சம்பளமும் பேசப்படுகிறது. ஒரேயொருவருக்கு மட்டும் விதிவிலக்கு. அவர், உதயநிதி.

தனது படங்களின் வெற்றிக்கு காமெடியும், சந்தானமும், கதாநாயகியும் முக்கியும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருப்பவர், இந்த மூன்றுக்காகவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்.

நண்பேன்டா படத்தில் நயன்தாராதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக மற்ற படங்களுக்கு அவர் வாங்குவதைவிட அரை கோடி அதிகம் தந்ததாக தகவல். அதேபோல் சந்தானத்துக்கும். மொத்தம் 45 நாள்கள் நண்பேன்டா படத்துக்கு மட்டும் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார்.

சந்தானம் இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு பத்து நாள்கள் கால்ஷீட் தந்தாலே அதிகம். அவர் 45 நாள்கள் கால்ஷீட் தந்ததை ஆச்சரியமாக பார்க்கிறது கோடம்பாக்கம்.

சந்தானத்தின் சாதனை கால்ஷீட்யானை இளையத்தால் எலியும் ஏறி விளையாடும் என்பது எலி பட விஷயத்தில் சரியாகதான் இருக்கிறது.

ஜெயம் படத்தில் அறிமுகமாகி விக்ரம், அஜீத், மாதவன் உள்பட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்தவர், சதா. பல வருடங்களாக சதாவுக்கு படங்களிலில்லை. குத்துப் பாடலுக்குக்கூட ஆடிப்பார்த்தார். அதற்கும் கூப்பிட ஆளில்லை.

இந்நிலையில் எலி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். தற்போது சென்னை பின்னி மில்லில் வடிவேலுடன் ஆடிக்கொண்டிருக்கிறார் சதா.

எலியில் சதா நாயகியா இல்லை இங்கேயும் ஒரு பாடலுக்கு ஆட்டமா என்பது தெரியவில்லை.

எலி வடிவேலுடன் நடினமாடிய சதாஅமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் 11 வயது சிறுமிக்கு 2400 காதல் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பென்சிலாவேனியாவில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் ஜெரால்டின் ஆல்கார்ன் (28) என்பவர், 11 வயது சிறுமிக்கு தவறான உறவுக்காக 2400 குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

அந்த குறுஞ்செய்தியில், தனது ஆழமான வெளிப்படுத்தும் விதமாகவும், அந்த சிறுமியை அவர் தத்தெடுத்துக் கொள்வதாகவும், அதனால் அவளது தாயை விட்டுவரும்படியும், இருவரும் வேறு எங்கேயாவது ஓடிப்போய் விடுவோம் என்றும் அனுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரிந்ததையடுத்து, அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் ஆசிரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் 1 லட்சம் டாலர் அபராதம் செலுத்தி வெளியே வந்துள்ளார்.

’ஓடிப்போகலாமா!..’ சிறுமிக்கு 2400 குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியை கைதுஉலகக்கோப்பை சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் விமான நிலையத்தில் கைகோர்த்தபடி வந்திறங்கினர்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை [29-03-15] ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியோடு நிறைவடைகிறது. இந்த தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியது.

கடந்த 26ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2ஆவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 328 ரன்கள் குவித்தது.

இந்த கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில், இலக்கை துரத்திப் பிடிப்பதில் வல்லவரான விராட் கோலி மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், அனுஷ்கா சர்மா வந்திருந்ததும் எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

அதற்கேற்றார்போல் விராட் கோலி களமிறங்கியபோது மைதானத்தில் இருந்த அனுஷ்கா சர்மா கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். இதனால் மைதானம் பரபரப்பானது. இந்நிலையில் விராட் கோலி 13 பந்துகளில் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கோலி அவுட்டானபோது அனுஷ்கா சர்மா முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது. அனுஷ்கா சர்மா கன்னத்தில் கை வைத்தப்படி உறைந்து போனார். புகைப்படக்காரர்கள் அவரது முகத்தை திரையில் காட்டி கொண்டே இருந்தனர்.

இதனால், கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை இணையத் தளங்களில் வறுத்து எடுத்து விட்டனர். சில இடங்களில் விராட் கோலியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். மேலும், அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்களையும் எரித்தனர்.

இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஜோடியாக வந்திறங்கினர். இருவரும் கைகோர்த்தபடி ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். கோலி அனுஷ்காவை பாதுகாத்து அழைத்துச் சென்று, காரில் அமரச் செய்தார். பின்னர் இருவரும் காரிலேயே பறந்து சென்றனர்.

ஜோடியாக கைகோர்த்தபடி விமான நிலையம் வந்திறங்கிய கோலி மற்றும் அனுஷ்கா சர்மாஉலக கோப்பை இறுதி போட்டியில், இந்திய ரசிகர்கள் தங்களது பேராதரவை எங்களுக்கு தர வேண்டும் என்று நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக கோப்பை இறுதி போட்டியில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் நாளை மெல்போர்னில் மோத உள்ளன. இந்நிலையில் நியூசிலாந்தின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், இந்திய ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”நாங்கள் உலகக்கோப்பை பசியோடு இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய ரசிகர்களின் ஆதரவு நியூசிலாந்துக்குதான் கிடைக்கப்போகிறது என்பது தெரிய ஆரம்பித்துள்ளது. இந்திய ரசிகர்களின் ஆதரவை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். நன்றி. என்று கூறியுள்ளார்.


மேலும், ’இறுதிப் போட்டியின் ஒவ்வொரு பந்திற்கும் எந்த வழிகளெல்லாம் முடியுமோ, அவ்வறெல்லாம் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

”இந்திய ரசிகர்கள் தங்களது பேராதரவை எங்களுக்கு தர வேண்டும்” - மெக்கல்லம் கடிதம்ஞாயிற்றுக்கிழமை [29-03-15] நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா அல்லது ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் ஆகுமா என்பது குறித்த ஓர் முன்னோட்டம்.நேருக்கு நேர்:

நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 125 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 84 முறையும், நியூசிலாந்து 35 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 6 ஆட்டங்களில் முடிவில்லை.

உலகக்கோப்பையில் இதுவரை:

உலக கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி 6-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அது பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.

1. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பை போட்டியில் இரண்டு லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. அதில் இரண்டிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. இந்தூர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. சண்டிகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை தோற்கடித்தது.

2. 1992ஆம் ஆண்டு ஈடன் பார்க்கில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் மார்ட்டின் குரோவ் சதம் (100) அடித்தார். இந்த ஆட்டத்தில், கடைசி 17 பந்துகளில் மட்டும் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

3. 1996ஆம் ஆண்டு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கிறிஸ் ஹாரிஸ் 130, கெர்மோன் 89 ரன்கள் குவித்தனர்.

ஆனால் அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை ஈட்டியது. அந்த அணியின் மார்க் வாக் 110, ஸ்டீவ் வாக் 59 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

4. 1999ஆம் ஆண்டு ஷோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டூவ்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார்.

5. 2003ஆம் ஆண்டு போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆனால் அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 30.1 ஓவர்களில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் பிரெட்லீ 5 விக்கெட்டுகளும், மெக்ராத் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

6. 2007ஆம் ஆண்டு குவின்ஸ் பார்க்கில் நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 215 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. மேத்யூ ஹைடன் 103, ரிக்கி பாண்டிங் 66 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 25.5 ஓவர்களில் 133 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் இரண்டு வீரர்கள்தான் இரட்டை இலக்கத்தை தாண்டினர். மற்ற 9 வீரர்களும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதுதான் கொடுமை. பிராட் ஹாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

7. 2011ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 206 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்தது. வாட்சன் மற்றும் ஹாடின் அரைச்சதம் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

இந்த உலக்கோப்பையில்:

8. நடப்பு உலக கோப்பை தொடரில் ஆக்லாந்து ஈடன்பார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 32.2 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டது. டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய 23.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில். மெக்கல்லம் 50 ரன்கள் எடுத்தபோதிலும் நியூசிலாந்தின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசிவரை தாக்குப்பிடித்த வில்லியம்சன் அணியை வெற்றிபெற வைத்தார்.

வெற்றி யாருக்கு?:

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்த உலகக்கோப்பையில் ஒன்றில்கூட தோல்வியடையாமல், தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளையப் போட்டியில் வெற்றி பெற்றால் அது நியூசிலாந்து அணியின் 300ஆவது ஒரு நாள் போட்டி வெற்றியாகவும் அமையும்.


இந்த உலகக்கோப்பை போட்டியில் மார்டின் கப்தில் 532 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மெக்கல்லம் 328, ஆண்டர்சன் 231, எல்லியாட் 227, சீன் வில்லியம்சன் 222 ரன்கள் எடுத்து மிரட்டுகின்றனர்.

அதுபோல பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட் இந்த உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தவிர டேனியல் வெட்டோரி 15, டிம் சவுதி 15, கோரி ஆண்டர்சன் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி பலமான அணியாகவே உள்ளனர்.

ஆனால், இந்த உலக கோப்பையின் லீக் முதல் அரையிறுதிப் போட்டி வரையிலான தனது அனைத்து ஆட்டங்களையும் நியூசிலாந்து அணி சொந்த நாட்டிலேயே விளையாடி இருக்கிறது. இப்போது தான் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடவிருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருக்கிறது. அதுவும் நாளை மோதவுள்ள நியூசிலாந்திடமே தோற்றிருக்கிறது. இதற்கு பலிதீர்க்க ஒரு வாய்ப்பாக ஆஸ்திரேலியா எடுத்துக் கொள்ளும் என்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

மேலும், அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 346, மேக்ஸ்வெல் 324 ரன்கல் எடுத்து முன்னணியில் உள்ளனர். மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி, ஷேன் வாட்சன், வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். மத்திய கள ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், பிராட் ஹாடின் போன்ற வீரர்களும் மிரட்டுவார்கள். கடைசி கட்டத்தில் ஜான்சன், ஃபால்க்னர் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி எதிரணையினரை மிரட்டி வருகிறார்கள்.

பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கோப்பையில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஜான்சன், ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் மிரட்டுவார்கள். கம்மின்ஸ், ஃபால்க்னர், மேக்ஸ்வெல் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த உலககோப்பையை டேனியல் வெட்டோரிக்கு சமர்ப்பிப்போம்’ என்று கூறியுள்ளார். இதேபோல இந்த உலகக்கோப்பை போட்டியோடு ஓய்வு பெறவிருக்கும் கிளார்க்குக்கு சமர்பிக்க முயற்சிப்பார்கள். இதனால் ஆட்டத்தின் போக்கை கணிப்பது கடிணமாக இருக்கும் என்பது உறுதி.

அணி வீரர்கள்:

ஆஸ்திரேலியா:
மைக்கேல் கிளார்க் (கே), ஜார்ஜ் பெய்லி, பேட் கம்மின்ஸ், ஜேவியர் டொஹார்டி, ஜேம்ஸ் ஃபால்க்னர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின் (வி,கீ.), ஜோஸ் ஹசில்வுட், மிட்செல் ஜான்சன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன்.

நியூசிலாந்து:
பிரண்டன் மெக்கல்லம் (கே), ட்ரெண்ட் போல்ட், கிராண்ட் எல்லியாட், டாம் லாதம், மார்டின் கப்தில், மிட்செல் மெக்லெனகன், நாதன் மெக்கல்லம், கெய்ல் மில்ஸ், ஆடம் மில்னே, டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லூக் ரோஞ்சி, டிம் சவுதி

இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்? சாம்பியன் பட்டம் நியூசிலாந்திற்கா, ஆஸி-க்கா?
Vijay Tv Show Jodi No 1 Season 8 28-03-15 Episode 23


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Chinna Papa Periya Papas - Episode - 20 28/03/2015
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vaani Rani 28-03-15 Sun Tv Serial Episode 612
Vijay Tv Show Kitchen Super Star Season4 28-03-15 Episode 7

 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Priyamanaval Sun Tv Serial 28-03-15 - Episode 59
 

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS NEWS HAPPY WATCHING

Vamsam 28-03-2015 - Sun Tv Serial Episode 528 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Show Super Singer T20 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial En Kanavan En Thozhan 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial En Anbu Thangaiku 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Uravugal Thodarkathai 30-03-15 to 03-04-15 Promo
 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING
 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING
 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Pudhu Kavidhai 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Kalyanam Mudhal Kadhal Varai 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Deivam Thandha Veedu 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Nandhavanam 30-03-15 to 03-04-15 Promo
Tamil Movie Vethu Vettu Hero Gets Angry For Crtisicing Movies In Social Media
India's First Laser Dancer Kotishwari 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Saravanan Meenatchi 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial Office 30-03-15 to 03-04-15 Promo 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vijay Tv Serial En Vaazhkai 30-03-15 to 03-04-15 Promo