காதல் ஜோடியின் கலக்கலான நடனம்... யப்பா சான்சே இல்லை!...

PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Sun Singer - 4 14-02-1614/02/2016 – Oru Varthai Oru Latcham Juniors 3

Oru Varthai Oru Latcham Junior 14-02-2016 Vijay Tv Show - Episode 60


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Top 10 Movies 14-02-16


Valentine's Day Special : Interview With Sundar C and Kushboo | Red Carpet | Sreedhar Pillai


Valentine's Day Celebration - Hindu Groups Vs Kiss Of Love Activists

* ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

* பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

* அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

* கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

* எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..

* திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

* பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

* சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

* ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.

* ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

* ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.

* சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

* இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

* இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.

என்ன கொடுமை சார் இது...?

இவ்வளவு பாவப்பட்டவங்களா ஆண்கள்...? யாரும் மறுக்கமுடியாத உண்மை...


நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உண்மமைக‌ள் வெ‌ளிவ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அதில் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம், அதிர்‌ச்‌சியையு‌ம் கூட ஏற்படு‌த்து‌ம். அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இங்கே..

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ.பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உள்ள வ‌ரிகளு‌ம் ஒவ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம். ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அதிகம் உள்ள பகு‌தி நா‌க்கு.

க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன. 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நம் உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்... தெரியுமா இந்த ஆச்சரியம்!...


Who Replaces Shamili From Dhanush's "Kodi"..?


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.

அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.

நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா ?


உடலுறவு பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் கேள்விகள்!


Ilaiyaraaja Aayiram – 14/02/2016

Vijay Tv Show Ilaiyaraaja Aayiram 14-02-16
Vijay Tv Show Valentines Day Special Koffee with DD |Valentines Day Special 14-02-16

PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Imsai Arasanum Manguni Amaicharu 04-02-16 | Sun TV

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sunday Galatta 14-02-16 - Sun Tv Show


 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS NEWS HAPPY WATCHING

Sollunganne Sollunga 14-02-16 - Sun Tv Show


Vijay Tv Show Kalakkapovadhu Yaaru Season 5 14-02-16


Lovely Divas, Valentines Day Special | 14/02/2016 | Puthuyugam TV


Kadhalar Dhinam, Valentines Day Special | 14/02/2016 | Puthuyugam TV


Kalyanam Mudhal Kadhal Varai - 15th To 19th February 2016 Promo


Saravanan Meenatchi - 15th to 19th February 2016 Promo


Deivam Thandha Veedu - 15th To 19th February 2016 Promo


Andal Azhagar - 15th To 19th February 2016 Promo
Seedhayin Raaman | 15th to 19th February 2016 - Promo


Kalaththu Veedu - 15th to 19th February 2016 Promo


En Kanavan En Thozhan - 15th To 19th February 2016 Promo


Nandhavanam - 15th To 19th February 2016 Promo


En Anbu Thangaiku - 15th To 19th February 2016 Promo


குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு காரணம் பாதங்களில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படுவது தான். நம் உடலிலேயே உள்ளங்கை மற்றும் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. அதனால் தான் அவ்விடங்களில் அதிகளவு வறட்சி ஏற்படுகிறது. ஆனால் அவ்விடங்களுக்கு போதிய அளவில் ஈரப்பசையை வழங்க வேண்டியது அவசியம்.

வலி மிகுந்த குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்று தெரியுமா? பொதுவாக உள்ளங்கையில் உள்ள சருமம் மென்மையாகவும், பாதங்களில் உள்ள சருமம் கடினமாகவும் இருக்கும். எனவே பாதங்களுக்கு இன்னும் அதிகளவிலான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு அடிக்கடி பாதங்களில் உள்ள இறந்த தோல்களை நீக்கி, பாதங்களில் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்களைத் தடவ வேண்டும்.

அதுமட்டுமின்றி குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். சரி, இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழம் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

எலுமிச்சை சாறு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும்.

குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

சோப்புத் தண்ணீர் குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

பாராஃப்பின் மெழுகு பாராஃப்பின் மெழுகை உருக்கி, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதிகம் வறட்சியடையும் குதிகாலில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கிளிசரின், ரோஸ்வாட்டர், எலுமிச்சை சாறு தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.


ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்!


Valentine's Day Special: Famous Personalities Share Their Experience Ner Ner Theneer (14/02/2016)


Lakshmi Menon Praises Ajith Kumar!...


சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் குருமா தான். அதில் பலரும் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு குருமாவைத் தான் செய்து சுவைப்பார்கள்.

ஆனால் ஹோட்டலில் செய்யப்படும் வெஜிடேபிள் குருமாவிற்கு இணை வர முடியாது. ஏனெனில் ஹோட்டல் வெஜ் குருமாவின் சுவையே தனி. இங்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

காய்கறிகள் - 1 1/4 கப் (நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1/2 கப்

முந்திரி - 4 கசகசா - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கிராம்பு - 2 பட்டை - 1/2

இன்ச் ஏலக்காய் - 1

தாளிப்பதற்கு... எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 கறிவேப்பிலை - சிறிது

செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, காய்கறிகளைப் போட்டு, உப்பு சேர்த்து பாதியாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனைப் போக வதக்கி விட வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்த காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து, குருமா ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால், ஹோட்டல் வெஜிடேபிள் குருமா ரெடி!!!

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா

Vijay Tv Show Connexion 14-02-16 Episode 118