Vijay Tv Show Neeya Naana 21-12-14


அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. ஆனாலும் இளம் கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் ராணி வேடத்தில் வருகிறார்.

இதற்காக வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சி போன்றவற்றை கற்றுள்ளார். அஜீத் ஜோடியாக நடிக்கும் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருகிறது.

அனுஷ்காவின் வசீகர அழகுக்கு அவர் சாப்பிடும் உணவு வகைகள் என்னென்ன என்ற ரகசியம் கசிந்துள்ளது. அதன் விவரம். தினமும் காலையில் எழுந்ததும் யோகா செய்கிறார். தியான பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.

அதன் பிறகு ஒரு கப் பச்சை தேயிலை அருந்துகிறார். தொடர்ந்து முளை கட்டிய தானியங்களை சாப்பிடுகிறார். அதன் பிறகு காலை சிற்றுண்டியாக இட்லி, தோசை குறைவான அளவு சாப்பிடுகிறார்.

மதிய உணவுக்கு முன் பழச்சாறு அருந்துகிறார். மதிய உணவாக காய்கறி சாலட் சாப்பிடுகிறார். சிறிது நேரம் கழித்து உலர்ந்த பழங்களை சாப்பிடுகிறார்.

அதன் பிறகு இரவு உணவாக கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காயுடன் ரொட்டி சாப்பிடுகிறார். உணவு வகைகளை சீராக எடுத்துக் கொள்வதால் எப்போதும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் அனுஷ்கா.

உணவுக்கட்டுப்பாடு, யோகா: அனுஷ்காவின் அழகு ரகசியம்


ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.

உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?

உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி, குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை வயாஸ்பான் திரவம், யூரோ கால்லின்ஸ் திரவம், கஸ்டோயியல் திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.

ஒருவரின் சுவாசம் நின்ற பின்னர் மூளையில் என்ன மாறுதல் ஏற்படுகிறது?


`இயற்கை குளுக்கோஸ்' என்று கொண்டாடப்படும் வாழைப்பழம் நமக்கு வைட்டமின்-ஏ, ஈ போன்றச் சத்துக்களைத் தருகிறது.

* இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும்.

சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும், மூட்டு வலி, வாத நோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

* தினமும் பூவன் பழம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல் நிலை சரியில்லாமல் போய் மெள்ள மெள்ள மீண்டும் வருபவர்கள் தினமும் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* மஞ்சள் காமாலை நோய் நீங்கிய பின்னும் கண்களில் தேங்கும் மஞ்சளை நீக்கும் வல்லமை படைத்தது ரஸ்தாளி பழம்.

* தினம் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட, அம்மை நோய் விட்டுச் சென்ற கொப்புளங்களின் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் மாற்றலாம்.

ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர்.. இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.

* செவ்வாழையில் வைட்டமின்-ஏ சத்து ஏராளமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சொரி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தி சருமத்தை சீராக்கும்.

நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் தளர்வையும் நீக்குவதோடு, எலும்பை பலப்படுத்தி பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்கும் வல்லமையும் செவ்வாழைக்கு உண்டு.

* நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.

* வயிறு நிறைந்திருக்கும்போது வாழைப்பழம் சாப்பிட்டால், அது தொண்டையிலேயே தங்கி விடும். இதனால் சிலருக்கு சளி ஏற்படுகிறது. எனவே வாழைப்பழம் சாப்பிட்ட பின் ஒரு டம்பளர் சூடான தண்ணீர் பருகுங்கள். சளி ஏற்படாது.

இதயத்தை வலிமையாக்கும் வாழை


சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய் விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது. ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக்கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

முகம் மிருதுவாகி, தங்கம் போல் ஒளி வீசும். கண்ணுக்குக் கீழ் கருவள யம் விழுந்து சோக ராணியாக வலம் வருகிற உங்களை உற்சாக தேவதையாக்குவதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்.

ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் இந்தக் கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே, கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும். கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டியது போல் கருவளையம் இருக்கிறதா? கவலை வேண்டாம்! இருக்கவே இருக்கிறது தக்காளி பேஸ்ட்.

தக்காளி சாறு - அரை டீஸ்பூன்,

தேன் - அரை டீஸ்பூன்,

சமையல் சோடா - ஒரு சிட்டிகை...

இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். வாரம் மூன்று முறை இப்படிச் செய்து வாருங்களேன். சங்குக் கழுத்துக்கு அர்த்தமே உங்கள் கழுத்துதான் என்றாகி விடும்!

முகத்தை மிருதுவாக்கும் தக்காளி பேஸ்ட்


டெல்லியில் உள்ள சிறார் மற்றும் சிறுமியர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அவற்றை ஒரு தொகுப்பாக தயாரித்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் துறையுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு தேசிய குழந்தைகள் கடத்தல் தடுப்பு அமைப்பு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து, டெல்லியின் மதன்பூர் டபாஸ் பகுதியில் உள்ள அஷ்ரயா என்ற அரசு காப்பகத்தில் தங்கியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க சில அதிகாரிகள் சென்றனர்.

அப்போது, அங்கிருந்த 17 வயது பெண் ஒருவர் அவர்களை கண்டதும் திடீரென்று சோகமாகி, ஒதுங்கி, ஒதுங்கி ஓரமாக செல்லத் தொடங்கினார்.

சந்தேகப்பட்டு அருகில் அழைத்து அவர்கள் விசாரித்தபோது, அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெற்ற துயரமான பிண்ணனி சம்பவம் தெரியவந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் உள்ள மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்தப் பெண், திருவிழா மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று பலூன் விற்கும் பெற்றோருடன் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், இந்தப் பெண்ணை சந்தித்த ஒருவன் டெல்லிக்கு அழைத்துச் சென்று வசதியான இடத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி அழைத்து வந்துள்ளான்.

10 நாட்கள் அந்தப் பெண்ணை தனியாக ஒரு வீட்டில் தங்கவைத்து தனது ஆசைகளை தீர்த்துக் கொண்ட பின்னர், டெல்லி வீதியில் நிற்கதியாக தவிக்கவிட்டு அந்த நபர் தலைமறைவாகி விட்டான்.

தனியாக தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை கண்ட டெல்லி போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அஷ்ரயா காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பெண் கூறிய இந்த தகவல்களை சேகரித்த டெல்லி போலீசார் உடனடியாக லூதியானா போலீசாரை தொடர்பு கொண்டனர்.

இதனையடுத்து, லூதியானாவில் இருந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் உடனடியாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர்.

விதி வசத்தால் பல்வேறு சோதனைகளை அனுபவித்துவிட்டு, இங்குள்ள அரசு காப்பகத்தில் தங்களது அன்பு மகள் அனாதைப் போல் கிடப்பதை பார்த்து கண்ணீர் விட்ட அவர்கள், அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி, தேற்றி தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

சிறுமியர் காப்பகத்தில் இருந்த 17 வயது பெண்ணை பெற்றோருடன் சேர்த்து வைத்த டெல்லி போலீசார்Vijay Tv Show Koffee With DD - Season 2 21-12-14


தேவையான பொருட்கள்

1அல்லது 1/2கப் சீனி

100g காய்ந்த இஞ்சி பவுடர்

1/4 கப் நீர்

1tsp நெய்

செய்முறை

கடாயில் நீரை கொதிக்க வைத்து அதில் சீனி சேர்த்து மேலும் கொதிக்க வைக்கவும்.

பின் அதில் இஞ்சி பவுடர் சேர்த்து கலந்து நன்றாக கொதிக்க வரும் வரை இருந்து அதில் நெய் சேர்த்து திக்காக வந்ததும் ஒரு பாத்திரத்தில் இட்டு அதனை துண்டாக வெட்டி போலித்தீன் பையினுள் இட்டு உண்ணுங்கள்.

இஞ்சி முறப்பா


Mom Crying Baby Help.....


மும்பை: ஆமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பி.கே. படம் இரண்டே நாட்களில் ரூ.56 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்த படம் பி.கே. ஆமீர் கான் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பட போஸ்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.

பி.கே. படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

முதல் நாள் பி.கே. படம் உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 844 தியேட்டர்களில் ரிலீஸானது. ரிலீஸான முதல் நாளே படம் ரூ.26.6 கோடி வசூல் செய்தது.

அடடே விடுமுறை அல்லாத நாளில் வெளியான போதிலும் பி.கே. படம் ரூ.26.6 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம் பி.கே. படத்தையும், ஆமீர் கானின் நடிப்பையும் விமர்சகர்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

ரூ.56 கோடி பி.கே. படம் ரிலீஸான இரண்டே நாளில் ரூ.56 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் இந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பாக்ஸ் ஆபீஸ் கில்லி: இரண்டே நாளில் ரூ.56 கோடி வசூல் செய்த பி.கே.


DD & Srikanth - Magical Moments - RAM ENTERTAINMENT


Muthumani Malai - Tribute to Maestro Raja Sir by Muzik Lounge Students


Guy Is Hungry And Eats a frog ALIVE!
Kappal Isai Veliyitu Vizha 21-12-14 Vijay Tv Show


Best Fails Of The Week 3 December 2014 || FailArmy


பெங்களூரில் திருமணத்தன்று மணமகன் வராததால், பெண் பொறியாளர் திருமணம் நின்று போனது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருபவர் அனு (26).

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் இவரது சொந்த ஊராகும். அதேபோல அந்த நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருபவர் முரளி கிருஷ்ணன். இவர் சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர்.

இந்த நிலையில் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்ததால் அனுவுக்கும், முரளி கிருஷ்ணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துவிடவே, பெங்களூரில் உள்ள ஜே.பி.நகரில் உள்ள திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது.

திருமண அழைப்பிதழ்களை அனுவின் வீட்டார் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்திருந்தனர். 

திருமண நாள் அன்று மண்டபத்தில் அனுவின் வீட்டார் ஏராளமானோர் வந்திருந்தனர். அதன்படி மணமகன் வருகைக்காக மண்டபத்தில் அனைவரும் காத்திருந்தனர்.

ஆனால் நேரம் செல்ல செல்ல மணமகன் முரளி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் வரவில்லை. அவரிடம் அனு கைப்பேசியில் விசாரித்துள்ளார்.

நண்பர் ஒருவருடன் வந்து கொண்டிருப்பதாகவும் முகூர்த்த நேரத்திற்குள் வந்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் முகூர்த்த நேரம் முடிந்த பின்பும் முரளி கிருஷ்ணன் வராததால் அவரின் கைப்பேசிக்கு அனு மீண்டும் தொடர்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் மண்டபத்தில் பதற்றம் அதிகரித்தது. அனுவின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

இதனையடுத்து தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி, திருமண நாள் அன்று வராமல் ஏமாற்றிய முரளி கிருஷ்ணன் மீது மணக்கோலத்திலேயே ஜே.பி.நகர் காவல் நிலையம் சென்று புகார் அனு கொடுத்துள்ளார்.

அதன்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து சென்னையை சேர்ந்த முரளி கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

திருமணத்திற்கு வராத மாப்பிள்ளை: மணக்கோலத்தில் பரிதவித்த மணமகள்.... உருகி உருகி அரங்கேறிய காதல்!...


பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.

இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும்.

முள்ளங்கி: முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

கேரட்: காய்கறிகளில் மிகவும் சுவையானது கேரட். கேரட்டில் வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மையாகும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.

இஞ்சி: இஞ்சியானது சமையலில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.

இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும், அஜீரணத்தை போக்கும், கபத்தை குணப்படுத்தும், ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.

உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணப்படுத்துகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன.

மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இதை சமைக்கும் போது இதனுடன் சிறிது புளியை சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்


2013 Kutra Charithiram - Analysis On "Prostitution Crimes" (21/12/2014) - Thanthi TV


234 Wheels Drive On - Review of "Yamaha FZ Version 2.0" - (21/12/14) - Thanthi TVVijay Tv Show Naduvula Konjam Disturb Pannuvom 21-12-14


பதற்றமாக இருக்கும்போது உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது நம்மை கவனமாக இருக்கவும், பிரச்னைகளை எதிர்கொள்ள துணையாகவும் உடலில் வெவ்வேறு பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்படவும் செயல்படுகிறது. பயப்படக்கூடிய சூழ்நிலைகளில் மிகவும் கவனமாகவும், தெம்புடனும் இருப்பது அவசியம்.

கவனத்தை அதிகரிப்பதற்கு மூளைக்கும், தெம்பை அதிகரிப்பதற்கு தசைகளுக்கும் இரத்த ஓட்டம் அதிகமாகி செல்கிறது. அதனால் வயிற்றுக்கும் குடலுக்கும் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் உணவு ஜீரணிக்கும் சக்தி குறைகிறது.

இதனால் வயிறு புரட்டுவது போல் தோன்றும். சில நேரங்களில் அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இதனாலேயே வருகிறது. பதற்ற நிலையில் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் நுரையீரல் வேகமாக இயங்குவதால் மூச்சுவிடுவது சிரமமாகிறது.

பதற்ற நிலையில் மூளை, தசைகள் போன்ற இடத்திற்கு இரத்தத்தை அதிகமாக செலுத்துவதற்காக இதயம் வேகமாக இயங்குகிறது. இதனால் ரத்த கொதிப்பும் நெஞ்சு படபடப்பும் வருகிறது.

பயம் மற்றும் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொள்ளவோ அல்லது விட்டு விலகவோ உடலில் அதிக சக்தி தேவைப்படுகிறது. அதிகமான சக்தியை பயன்படுத்தும்போது உடல் சூடாகின்றது. சூடான உடலை குளிர்ச்சிப்படுத்த வேண்டும். உடல் குளிர்ச்சியாவதற்கு அதிகம் வியர்க்க வேண்டும்.

பதற்ற நிலையில் அதிகம் வியர்ப்பதற்கு இதுவே காரணமாகும். மன பதற்றமான சூழ்நிலைகளில் மூச்சை வேகமாகவும், மேலோட்டமாகவும் விடுவதால் இரத்தத்தில் கரியமில வாயு குறைகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கின்றது.

இது இரத்த குழாய்களை உடல் முழுவதும் குறிப்பாக மூளை நரம்பு மண்டலத்தில் உள்ள ரத்த குழாய்களை சுருங்க செய்கிறது. இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது.

இதன் விளைவாக மூளைக்கு குறைந்த அளவு பிராண வாயு செல்கிறது மற்றும் ரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைகிறது. இதனால் உடலில் ஊசி குத்துவது போலவும், கை, கால் மரத்துப்போவது போலவும் மற்றும் நரம்பு இழுப்பது போன்ற உணர்வுகளும் ஏற்படும்.

தலை சுற்றல், தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு, இதய துடிப்பு அதிகரித்தல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். ஒரு முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் முன் நமது தசைகள் இறுகுவதை உணர மாட்டோம்.

காரியத்தை முடித்த பின் முதுகுவலியோ கழுத்து பின்புறம் வலியோ வாட்டும். பயத்தில் தசை இறுகுவதே இதற்கு காரணமாகும். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

பதற்றமடைந்தால் பயங்கர பாதிப்பு!


Vaanavil Live Life - Latest fashion Trends For Kids and Adults - (21/12/2014)


MDMK Chief Vaiko Invites Students For Marathon To Ban Liquor In TN - Thanthi TV


கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் ஹீரோயின்கள் ரீ என்ட்ரி ஆவது பற்றி எழுதியிருந்தோம்.

ஒரு காலத்தில் கனவுக் கன்னிகளாக வும், பரபரப்பான நடிகைகளாக வும் இருந்தவர்கள், குடும்ப வாழ்க்கைக்கு சென்று அதற்குரிய கடமை களை முடித்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு திரும்பும்போது அவர்களுக்கான களம் பரந்து விரிந்து கிடக்கிறது. அவர்கள் பரபரப்பாக இருந்தபோது செய்ய முடியாத பல சாதனைகளுக்கான வாய்ப்பு இப்போது அவர்களுக்கு இருக்கிறது.

இப்போது பணம் முக்கியமில்லை, கிளாமர், அழகு இமேஜை தக்க வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதால் பல பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுத்து திறமையை நிரூபிக்கலாம்.

அதைவிட்டுவிட்டு அம்மா, அண்ணி கேரக்டரில் நடித்தோம், அழுது வடிந்தோம் என்று நடிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தோம்.இதோ வந்து விட்டார் ஜோதிகா...

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த பூசி மெழுகிய தேகம், பப்ளிமாஸ் கன்னம், பெரிய கண்கள் என பத்து வருடங்கள் தமிழ் சினிமாவை தன் உன்னத நடிப்பாலும், அழகாலும் கட்டிப் போட்டவர் ஜோதிகா.

அவர் நடித்த எந்தப் படமும் சோடை போனதில்லை. "கிளாமருக்கு நான் லிமிட்டேஷன் வச்சிருக்கேன்" என்று எல்லா நடிகைகளும் சொல்வார்கள். ஆனால் அந்த லிமிட்டேஷனை கடைசி வரை காப்பாற்றியவர் ஜோதிகா.

குஷி, பேரழகன், சந்திரமுகி, மொழி ஆகிய படங்களை தேசிய விருது தவறவிட்டது அதன் குற்றமே தவிர ஜோதிகாவின் குற்றமல்ல.

காக்க காக்க மாதிரி கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி, தெனாலி மாதிரி காமெடி படமாக இருந்தாலும் சரி, லிட்டில் ஜான் மாதிரி ஃபேன்டசி படமாக இருந்தாலும் சரி, முகவரி மாதிரி கதைப் படமாக இருந்தாலும் சரி, மொழி மாதிரி உணர்வைக் கொட்டும் படமாக இருந்தாலும் சரி, அதில் தன்னை பலமாக நிலைநிறுத்திக் கொண்டவர் ஜோதிகா.

7 படங்களில் தன்னுடன் நடித்த சூர்யாவை 7 வருடங்கள் காதலித்து, காதல் ரகசியம் காத்து திருமணம் செய்து கொண்டது சந்தோஷம்தான்.

ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகியது ஏமாற்றமே. அவர் விலகிய பிறகும் அவருக்கான இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை. அது காலியாகவே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதோ இப்போது தன் இடத்தை தானே நிரப்ப வந்துவிட்டார் ஜோதிகா.

மஞ்சு வாரியர் நடித்து கேரளாவில் வெற்றிபெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் ரீமேக்கில் தனது பயணத்தை தொடங்கிவிட்டார் ஜோதிகா. ஜோதிகா நடிப்பதை சூர்யா தடுக்கிறார் என்கிற வதந்திகளை உடைப்பது மாதிரி அமைந்திருக்கிறது சூர்யாவே அதன் தயாரிப்பாளர் என்பது.

நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பெண் வாழ்க்கையில் போராடி சாதிக்கிற கதைதான் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. நடுத்தர வயதில் இருக்கும் ஜோதிகாவால் நிஜத்திலும் நிறைய சாதிக்க முடியும்.

சினிமாவில் அவர் செய்திருக்க வேண்டிய, செய்யத் தவறிய பல வேலைகள் பாக்கி இருக்கிறது. நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

உருகி உருகி காதல், மரத்தைச் சுற்றி டூயட், ஹீரோவுக்காக பல்லிளித்து, அழுது வடிந்து என வழக்கமான ஹீரோயின் வேலைகளிலிருந்து தன்னை முற்றிலும் வித்தியாசப்படுத்தி, ஒரு நடிகையால் இந்த உயரத்தையும் தொட முடியும் என்று காட்ட வேண்டிய நேரம் ஜோதிகாவுக்கு வந்திருக்கிறது.

அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதன் தொடக்கமே 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'. அவருக்கு சிறகு கட்டி பறக்க விட்டிருக்கும் சூர்யாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் நன்றி.வெல்டன் ஜோதிகா!

வெல்டன் ஜோதிகா!


ரஜினியின் அறிவிக்கப்படாத அடுத்த வாரிசாக அமர்க்களப்படுத்திவருகிறார் அஜித். தொடர்ந்து வெற்றி களைக் குவித்துவரும் இவருக்கு ரசிகர்களின் வட்டம், மாவட்டமாய் வளர்ந்து, மாநிலங்கள் தாண்டி விரிந்து கொண்டிருக்கிறது.

படம் வெளியாகும்போது தியேட்டர்களில் பேனர் கட்டி புகழ்பாடவேண்டாம், கட்-அவுட் வைத்து பால்குளியல் நடத்த வேண்டாம், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டபிறகும், ‘அதச்சொல்றதுக்கு நீ யாருய்யா? நாங்க அப்பிடித்தான் செய்வோம்’ என்று பாசக்காரப்புள்ளைகளாக அஜித்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டம்.

ஜீன்ஸ் மாறாத டீன்ஸ் ரசிகர்கள் கூட, ‘வீரம்’ படம் வந்த பிறகு வேட்டி- சட்டைக்கு மாறுவதை ஃபேஷனாகக் கொண்டார்கள்.

‘உயிரினும் மேலான ரசிகர்களே! புகை, மது இரண்டுமே தீங்கானது. திரைப் படத்தின் பாதிப்புகளில் கெட்டவைகளை அரங்கின் வாயிலோடு விட்டுவிட்டு, நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.

உங்கள் நல் ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி என்றென்றும் நிலைத்திருக்க... வாழ்த்துக்களுடன் அஜித்குமார்’ என்று ரசிகர்களுக்கு ‘தல’ எழுதிய கடிதம், அவர்களது குடும்பத்தையும் கவர்ந்தது. அப்புறமென்ன, அவர்களும் ரசிகர்களானார்கள்.

இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் அஜித் ஏற்கும் கதாபாத்திரங்களை பொது ரசிகர்களும் ஏற்றுக்கொள்வதே இவரது வெற்றிக்கு உத்தரவாதத்தை எந்த வாதம், விவாதமும் இல்லாமல் தருகிறது.

மவுனப்படம் எடுத்தாலும், அதைப் பேசவைத்துவிடும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ‘தல’ கைகோர்த் திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம், பூஜைபோட்ட நாளிலிருந்தே பண்டிகைக் கோலம் கண்டுவருகிறது.

யூடியூபில் தூண்டல் காட்சி வெளியானபோது முதல் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் 5 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது இதுவரை இல்லாத திரைச் சாதனை.

தன்னை நல்லவராக மட்டுமே காட்டிக்கொண்டு, ரசிகர்களுக்கு வஞ்சக வலை வீசாமல், கெட்டவனாகவும் வருவேன் என்று நெஞ்சக வலை விரிப்பதால் உஷார் பேர்வழிகளும் இவரிடம் சுலபமாக சிக்கிக் கொள்கிறார்கள்.

இவரது வெளிப்படையான பேச்சுக்கு, எழுந்து நின்று கைதட்டும் ரஜினிகாந்தின் அடுத்த வாரிசாகவே ‘தல’யை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் பொது ரசிகர்கள். பக்குவ முதிர்ச்சியும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரமும் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்கும் என்பதே மனச்சாட்சியோடு பேசும் கோடம்பாக்க சினிமாக்காரர்களின் கருத்து.

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்?
 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Raasi Palan 21-12-14 - Sun Tv Show
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHINGFree Watch Sun Tv Morning News At www.techsatish.net,Sun Tv Morning News -Cast,Titlesong,Mp3
Sun Tv Morning News Watch Online At www.techsatish.net
Sun Tv Morning News , Sun Tv Morning News Today,Sun Tv Morning News Wiki,Sun Tv Morning News ,Sun Tv Morning News Watch,Sun Tv Morning News Online,Watch Sun Tv Morning News Online,Sun Tv Morning News YouTube,Sun Tv Morning News,Sun Tv Morning News ,Sun Tv Morning News ,Sun Tv Morning News tamil News,Sun Tv Morning News

Sun Tv Morning News 21-12-2014PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Mundhanai Mudichu 20-12-14 Sun Tv SerialVijay Tv Show Oru Varthai Oru Latcham Juniors 21-12-14


Kaaviya Thalaivan Movie Team in Star Junction


Actresses Suhasini & Sindhu in Celebrity Kitchen


"No Democracy In DMK Party" - Exclusive Interview With Napoleon - Thanthi TV