அமைச்சர் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சசி தரூரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் சுனந்தா இறந்து கிடந்தார்.

சசிதரூரின் வீட்டு பணியாளர் நாராயண் சிங், கார் டிரைவர் பஜ்ரங்கி மற்றும் அவரது குடும்ப நண்பர் சஞ்சய் திவான் ஆகியோரை சந்தேகத்துக்கு உரிய நபர்கள் என டெல்லி காவல்துறை அறிவித்தது. சிதரூரிடம் காவல்துறையினர் ஏற்கனவே 3 தடவை விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் மூவரும் சில உண்மைகளை மறைப்பதால், அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதி மன்றத்தில் டெல்லி காவல்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கியது. இது குறித்து விசாரிக்க டெல்லி போலீஸ் சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டெல்லி காவல் துறை ஆணையர் கூறுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் மேலும் சிலரிடம் சோதனை நடத்தப்படும் என்றார்.

இந்நிலையில், சுனந்தா கொலை வழக்கில், அவரது கணவர் சசி தரூர், உண்மைகளை மறைப்பதாகக் காவல்துறையில் சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவரிடம், பாலிகிராப் என்ற உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து விரிவான ஆலோசனைகளைக் காவல்துறை தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சசி தரூரிடம் உண்மை கண்டறியும் சோதனை
பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற எச்.ராஜாவின் பேச்சுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

பாஜக தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் எச்.ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.

“பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும்” என்று அவர் பேசியிருப்பது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மதச்சார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல அவர்களின் உரிமையுமாகும் என்பதை மனதில் வைத்து இதுபோன்ற வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மத நல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் அமைதிக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது குறித்த எச்.ராஜாவின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்
அழகை வைத்து பதவி உயர்வு பெற்றேனா என்று தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரி ஆவேசமாகக் கேள்வியெழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால், தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக பிரபல ஆங்கில வார இதழ் அவுட்லுக் செய்தி வெளியிட்டது. அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், பணியில் பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பிரில் வைத்த சட்டை போட்டு வந்து அனைவரையும் அசத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சி தொடர்பாக கேலிச்சித்திரமும் வெளியிட்டுள்ளது. இது தெலங்கானா மாநில அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை பார்த்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா ஆவேசம் அடைந்தார். என்னை ஆபாசமாக சித்தரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தி வெளியிட்ட இதழுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "என்னைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பெண் அதிகாரி ஸ்மிதா நிபந்தனையும் விதித்துள்ளார்.

மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு பிறந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 4 ஆவதாகத் தேர்ச்சி பெற்றார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”அழகை வைத்து பதவி உயர்வு பெற்றேனா?”: பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்!விக்கிப்பீடியாவில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பற்றிய தகவல் மத்திய அரசு அலுவலகத்தின் கணிணி ஐபி முகவரி மூலம் திருத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

விக்கிப்பீடியா இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேருவின் குடும்பத்தினர் சிலரை பற்றிய தகவல்கள் ஜூன் 26 ஆம் தேதி திருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருத்தம் மத்திய அரசுக்கு சொந்தமான இணையதள முகவரி (ஐ.பி. அட்ரஸ்) மூலம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எனினும் யாரால் இந்த தகவல் திருத்தம் செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த திருத்தப்பட்ட தகவலின் படி நேருவின் தாத்தாவான காங்காதர் பிறப்பால் முஸ்லீம் எனவும் அவரது பெயர் கிசாதின் கசாய் என்றும் பிரிட்டிஷ்காரர்கள் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக இந்துவாக மாறி தனது பெயரையும் கங்காதார் எனவும் மற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நேருவுக்கும் எட்வினா மவுண்ட் பேட்டனுக்கும் இடையே உள்ள நட்புறவு குறித்தும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நேரு குறித்த விபரங்கள் திருத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் ஐ.பி. முகவரியில் இருந்தே திருத்தப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தலைவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தான் இத்தகைய திருத்தங்களை செய்துள்ளது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

விக்கிப்பீடியாவில் ஜவஹர்லால் நேரு மற்றும் மோதிலால் நேரு குறித்த தகவலை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு முஸ்லீம் என காட்டவும் ஒரு கெட்ட நோக்கத்துடன் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரு இந்தியர், இந்துவா அல்லது முஸ்லீமா என்பது ஒரு விஷயமே இல்லை. விக்கிப்பீடியாவில் திருத்தம் மேற்கொள்ள நடந்த முயற்சி குறித்து அரசு முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த திருத்தங்கள் தேசிய தகவல் மையம் என்னும் என்.ஐ.சி. மூலமாகவே செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த திருத்தங்கள் அனைத்தும் விக்கிப்பீடியாவின் ஆன்லைன் எடிட்டர்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிப்பீடியாவில் நேருவை பற்றிய தகவலை திருத்த மத்திய அரசு முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டுகாமெடி செய்ய மட்டுமில்லை நடிக்கவே தெரியாமல் தமிழ் சினிமாவில் ஒருவர் வலம் வருகிறார் என்றால் அது பவர் ஸ்டார் என தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் சீனிவாசன். இவரது கோமாளித்தனங்களை காமெடி என்று தமிழ் திரையுலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ரஜினியை விமர்சனம் செய்யும் படத்தில் இவரைத்தான் ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் சிங்காரவேலன்.

லிங்கா நஷ்டமடைந்ததை பின்னணியாக வைத்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஒரு படம் தயாரிக்கிறார். லிங்கா போன்ற கதையம்சம் உள்ள படத்தில் சீனிவாசன் நடிக்கிறார். அது தோல்வியடைகிறது. அதனால் விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அதனை சீனிவாசன் என்ன செய்து நிவர்த்தி செய்தார் என்பது கதை. இது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். கூடுதல் தகவல், இந்தப் படத்துக்கு நானும் ஹீரோதான் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை லிங்காவால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பணம் வாங்காமல் இலவசமாக தர முடிவு செய்துள்ளாராம் சிங்காரவேலன்.

முக்கியமான விஷயம், இந்தப் படத்தை இயக்கித் தர இன்னும் இயக்குனர் முடிவாகவில்லை. பேசாமல் சிங்காரவேலனே இயக்கலாமே.

நானும் ஹீரோதான் - சூப்பர் ஸ்டார் வேடத்தில் பவர் ஸ்டார்நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றி என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் மிகுந்த நேர்மையுடனும் (?), தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான மேற்பார்வையுடனும் (?), எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கிடையே (?), எந்தவிதமான அமைச்சர்களின் ஆர்ப்பாட்டமுமின்றி (?), எதிர்க் கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கெல்லாம் முறையாக ஜெயலலிதா பதிலளித்து (?) தேர்தல் ஆணையம் – காவல்துறை – அதிமுக எனும் முத்தரப்புக் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாராம்.

2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி “முன்னோட்டமா” என்பதற்கு இன்றைய ஆங்கில நாளிதழ், ஒரு களத்தில் வெற்றி ஆனால் முழுப்போர் இன்னும் முடியவில்லை; சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டம் என்று சொல்வது சிறிதும் பொருத்தமில்லாதது. இடைத்தேர்தல் முடிவுகளும் பொதுத் தேர்தல் முடிவுகளும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை; எனவே அவற்றை ஒப்பிட முடியாது என்று பதில் கூறியுள்ளது.

எனவே அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, அத்தனை அமைச்சர்களையும் அல்லும் பகலும் தெருவிலே ஓட விட்டு, பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பதற்கொப்ப களத்தில் நிற்காத நிலையில், தேர்தல் கமிஷனின் தோளில் கை போட்டுக் கொண்டு பெற்றது வெற்றி தானா? நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த இடைத் தேர்தல் வெற்றி! வெறும் காற்றில் வாள் வீசி வீராப்பு பேசி எகிறிக் குதிப்பதைப் போன்றது தான் இந்த வெற்றியும்!

ஆனால் இந்த வெற்றி, அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஜெயலலிதா தனது நன்றி அறிக்கையில் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போது எரிச்சலும் சிரிப்பும் தான் மாறி மாறி வருகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றதுதான் இடைத் தேர்தல் வெற்றி: கருணாநிதிஉத்தம வில்லனைத் தொடர்ந்து கமல் அவசர அவசரமாக தொடங்கிய படம், தூங்கா வனம். ஸ்லீப்லெஸ் நைட் பிரெஞ்ச் படத்தின் அதிகாரப்பூர்வமான இந்தத் தழுவலை சென்ற மாதம் தொடங்கினார். இந்த மாத இறுதிக்குள் படம் நிறைவடைகிறது.ஒரே இரவில் நடக்கும் கதைதான் தூங்கா வனம். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. கமலுடன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர், ஆஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை.

கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கும் இந்தப் படம் இந்த மாதமே முடிவடைகிறது. ஆகஸ்டில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தில் நிறைவடையும் தூங்கா வனம்ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தப் படம் காக்க காக்கவில் வில்லனாகி கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவன். திருட்டு பயலே, நான் அவனில்லை என்று மினிமம் கியாரண்டி நடிகராக வளர்ந்து வந்தவரை திடீரென்று காணவில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு அதிபர் படத்தின் மூலம் திரும்பி வந்துள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜீவனின் பேட்டி.

நீங்க சென்னையில் இல்லை, உங்களை பார்க்க முடிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?

நான் ஊர்ல இருக்கிறதில்லை, வெளியூர் வெளிநாடு போயிடறேன், தயாரிப்பாளர்களால என்னை மீட் பண்ண முடியுறதில்லைன்னு தவறான வதந்தி உலவுகிறது. அதெல்லாம் வதந்திதான்.

நீங்க இப்போ சென்னையில்தான் இருக்கிறீர்களா?

ஆமா, சென்னையில்தான் தங்கியிருக்கேன். சென்னை தி.நகரில் பத்தாயிர ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் குடியிருக்கேன்.

உங்களை எளிதில் சந்திக்க முடியாது என்பதெல்லாம்...?

வதந்திதான். நிறைய பேரை சந்திச்சுகிட்டிருக்கேன். நிறைய கதைகள் கேட்கிறேன். டைரக்டர்ஸ் யார் வேணும்னாலும் என்னை சந்திக்கலாம், கதை சொல்லலாம்.

உங்க படங்களில் நாயகிகள் அதிகம் இருப்பது ஏன்?

நான் அவன் இல்லை படம் 1975 -இல் கே.பி. சார் டைரக்ஷனில், ஜெமினி சார் நடிச்சு வெளிவந்தது. அந்தப் படத்தை அதே பெயர்ல ரீமேக் பண்ணுனோம். தமிழ்ல ஒரு பழைய படத்தை ரீமேக் பண்றது அதுதான் முதல் தடவை. அதுல ஆறு ஹீரோயின்ஸ். அப்புறம் அதன் சீக்வெல், நான் அவன் இல்லை டூ. தமிழ்ல ஒரு படத்தோட சீக்வெல் வர்றதும் அதுதான் முதல் தடவை. அதுல அஞ்சு ஹீரோயின்ஸ். இது எதேச்சையா அமைஞ்சது.

இந்தப் படத்தில...?

ஒரேயொரு ஹீரோயின்தான். வித்யா பிரதீப். நல்லா நடிச்சிருக்காங்க.

அதிபர் கதை என்ன?

முன்பு நடிச்ச படங்களில் பெண்கள் எங்கிட்ட ஏமாறுவாங்க. இதில் நான் மத்தவங்ககிட்ட ஏமாறுவேன். உண்மை சம்பவத்தை வச்சு படம் தயாராகியிருக்கு.

படம் எப்படி வந்திருக்கிறது? எப்போ ரிலீஸ்?

நல்ல படமா வந்திருக்கு. நிறைய டுவிஸ்ட் படத்துல இருக்கு. பாரின்ல படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். இந்த மாசம் திரைக்கு வந்துவிடும்.

பத்தாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருக்கேன் - ஜீவன் பேட்டிஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகிலேயே முதன் முறையாக ரோபோக்களுக்கு திருமணம் நடைபெற்றுது.
மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபாவுக்களில், ஆண் ரோபோவுக்குப் புரோயிஸ் என்றும், பெண் ரோபோவுக்கு யுகிரின் என்று பெயர்.

ஆண் ரோபோ அளவில் பெரியதாக எந்திர மனித உருவிலும், பெண் ரோபோ ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண் ரோபோவுக்கு, உலகில் உள்ள மணப்பெண் போலவே பக்காவாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இரு ரோபோவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்ட கொண்டது.

இதனை ஜப்பான் முறைப்படி கொண்டாடும் வகையில், கேக் வெட்டி, ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்பட்டது.

உலகிலேயே முதன் முறையாக ரோபோக்களுக்கு திருமணம்நமது இந்திய வீரர்கள் என் உடன் பிறந்த சகோதரர்கள் போன்றவர்கள் என இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சொதப்பியதால், ரவி சாஸ்திரி இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. எனினும் மூத்த வீரர்களின் ஆதரவால் மீண்டும் ரவி சாஸ்திரியே இயக்குனராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் இந்திய வீரர்கள் எனது சகோதரர்கள் என கருத்து தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி. இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், இந்திய வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கருதினேன். மேலும் இந்திய வீரர்கள் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திய வீரர்கள் எனது சகோதரர்கள்: ரவி சாஸ்திரி


இந்தோனேசியாவில் விமானப்படை விமானம், விபத்துக்கு உள்ளானது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தயாரானதும், 4 என்ஜின்களைக் கொண்டதுமான ‘சி–130 ஹெர்குலிஸ்’ ரக விமானங்கள், இந்தோனேசிய விமானப்படையில் இடம் பெற்றுள்ளன. அவற்றை விமானப்படை வீரர்களை ஏற்றிச்செல்வதற்கும், தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கும் இந்தோனேசியா பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அந்த விமானங்களில் ஒன்று, நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.08 மணியளவில், சுமத்ரா தீவில் மேதன் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேட்டுனா தீவுக்கு 113 பேருடன் புறப்பட்டு சென்றது.

இதில் 3 விமானிகள் சிப்பந்திகள் உள்பட 12 , விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 101 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம், புறப்பட்டுச்சென்ற 2 நிமிடங்களில் விமானப்படை தளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் விழுந்து, நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. மக்கள் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து எரிந்ததில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிந்து பலத்த சேதம் அடைந்தன.

இந்த, விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

பின்னர் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. இறுதியில், விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் (ஒரு குழந்தை உள்பட 122 பேர்) பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக விமானத்தில் 113 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பொதுமக்களும் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி அகஸ்டினஸ் தெரிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் இதுவரையில் 141 சடலங்களை மீட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு, அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் "டுவிட்டர்’" சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், "(பலியானவர்களின்) குடும்பங்களுக்கு பொறுமையையும், பலத்தையும் கொடுக்க வேண்டும். இத்தகைய பேரிடர்களில் இருந்து இனி நாம் காக்கப்படுவோமாக" என கூறியுள்ளார்.

இந்த விமான விபத்துக்கு எந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், விபத்துக்குள்ளான விமானம், 51 ஆண்டு பழமையானதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தோனேசியாவில் விமான விபத்து: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வுவங்கியில் ரூ. 25 கோடி மோசடி செய்ததாக ஆந்திர பெண் எம்.பி. மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகபட்டிணம் மாவட்டம் அரபு நாடாளுமன்ற தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. கொத்தபள்ளி கீதா.

இவர் எம்.பி. ஆன பிறகு தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்று விட்டார். இந்நிலையில் கொத்தபள்ளி கீதா எம்.பி., அவரது கணவர் ராம கோடீஸ்வர ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் போலி பத்திரங்களை கொடுத்து ரூ. 25 கோடி கடன் வாங்கி மோசடி செய்தனர்.

இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் அரவிந்தக்ஷன், ஜெயபிரகாஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில், தற்போது இந்த வழக்குகளில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் கொத்தபள்ளி கீதா எம்.பி., அவரது கணவர் ராம கோடீஸ்வர ராவ், வங்கி அதிகாரிகள் அரவிந்தக்ஷன், ஜெயபிரகாஷ், போலி பத்திரம் தயாரித்து கொடுத்த ராஜ்குமார் உள்பட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி மூலம் வங்கிக்கு ரூ. 42.79 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கியில் ரூ. 25 கோடி பண மோசடி: பெண் எம்.பி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்நடிகர் அப்பு குட்டியை வைத்து அஜீத் ஒரு குறும்படம் எடுக்கிறார் என சில ஊடகங்கள் கலர் கலராக தோரணம் கட்டின. அதன் சாயம் தற்போது வெளுத்திருக்கிறது.வீரம் படத்தின் போது, ஒரே மாதிரி கெட்டப்பில் நடிக்காதீங்க என்று அப்பு குட்டியிடம் கூறியிருக்கிறார் அஜீத். நம்மையெல்லாம் வச்சு வித்தியாசமாக யார் சார் படமெடுக்கப் போகிறார்கள் என பதிலளித்துள்ளார் அப்பு குட்டி.

சமீபத்தில் அஜீத்திடமிருந்து அப்பு குட்டிக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரும் கிளம்பிச் சென்றிருக்கிறார். போன இடத்தில் அவரது அளவுக்கு ஏற்ற விதவிதமான காஸ்ட்யூம்கள் காத்திருந்திருக்கின்றன. அதை அணிய வைத்து அப்பு குட்டியை விதவிதமாக போட்டோ எடுத்துள்ளார் அஜீத். மேலும், அப்பு குட்டியின் இயற்பெயர் சிவபாலனை; என்பதை கேட்டு தெரிந்து கொண்டவர், அவரை சிவபாலன் என்றே அழைத்திருக்கிறார். மற்றவர்களையும் அப்படி அழைக்கும்படி கூறியிருக்கிறார்.

அஜீத்தே சொன்ன பிறகு அப்பீல் ஏது. சிவபாலன் என்கிற அப்பு குட்டியாக இப்போது வளர்ந்து நிற்கிறது அவரது பெயர்.

பெயரைப் போலவே உங்களது கரியரும் வளரட்டும்.
அப்பு குட்டியை விதவிதமாக சுட்டுத் தள்ளிய அஜீத்உலகத் தரம் வாய்ந்த சென்னை மெட்ரோ ரயிலில் இன்றைய தினம் பயணம் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “நவீனமயமான, தூய்மையான, பசுமையான மெட்ரோ ரயில் திட்டம் உள்ள மாநகரங்களின் பட்டியலில் சென்னை மாநகரம் இணைந்திருக்கிறது. உலகத் தரம் வாய்ந்த சென்னை மெட்ரோ ரயிலில் இன்றைய தினம் பயணம் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

இந்த கனவு திட்டத்தை நனவாக்க நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது பாடுபட்டிருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட பொறியாளர்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மெட்ரோ ரயிலையும், ஸ்டேஷன்களையும் சுத்தமாக, தூய்மாக வைத்துக் கொள்ள பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் காலத்தில் சென்னை மெட்ரோ ரயில் விரிவுபடுத்தப்பட்டு மேலும் பல புதிய ஸ்டேஷன்கள் திறக்கப்படுகின்ற போது சென்னையில் போக்குவரத்திற்கு தனியார் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து, அதிகமான மக்கள் மெட்ரோ ரயில் போன்ற புதிய போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது” என்றார்.

’மெட்ரோ ரயிலில் பயணித்தது மகிழ்ச்சியான தருணம்’ - ஸ்டாலின்உலகில் அதிகளவு சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் தோனி இடம்பிடித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான அதிகளவு சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சான், அபிஷேக் பச்சன், சல்மான் கான் ஆகியோர் 71 ஆவது இடத்தையும், அக்‌ஷய் குமார் 76 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டனான தோனி 82 ஆவது இடத்தில் உள்ளார்.

இதில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். 2 ஆவது இடத்தை குத்துச்சண்ட வீரர் மென்னி பாக்கியாவோயும், 3 ஆவது இடத்தை பிரபல பாடகர் கேத்தி பெர்ரியும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிக சம்பளம் பெறும் பிரபலங்கள் பட்டியலில் தோனி இடம்பிடிப்புசேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் என்ஜினியர் கோகுல்ராஜ். இவர் கடந்த 6 நாட்களுக்கு முன் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோகுல்ராஜும் அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் கோவிலில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் கோகுல் ராஜை மட்டும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த காட்சிகள் யாவும் அந்த கோவிலின் சிசி டிவியில் பதிவாகியுள்ளது. கோகுல்ராஜ் கடத்தப்பட்ட தகவலை அந்த பெண், தம் நண்பர்களிடத்தில் கூறியதையடுத்து கோகுல்ராஜை அவர்கள் தேடினர். இந்நிலையில் தான் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.

இந்த பிரச்சனையில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக கூறி, இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி, அவரது சடலத்தை வாங்க மறுத்து இன்றுவரை அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் களத்தில் குதிக்க, இந்த விவகாரம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோகுல்ராஜ் காதலித்து வந்த பெண் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவரது ஆட்கள்தான் கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக கூறி தொடர்ந்து போராடிவரும் நிலையில், சம்பந்தப்பட்ட யுவராஜ் தலைமறைவாகிவிட்டார். காவல்துறை விசாரணை ஒருபக்கம், போராட்டம் மறுபக்கம் என நடந்து கொண்டிருக்க, கோகுல்ராஜின் சடலம் இன்றுவரை சேலம் அரசு மருத்துவமனையில் இருக்கிறது.

கோவில் சிசிடிவி காட்சிகள் மற்றும் யுவராஜ் எழுதிய கடிதத்தினையும் கொண்டு காவல்துறையினர் இந்த வழக்கில் விசாரணை நடத்திவரும் நிலையில், வழக்கின் போக்கில் திடீர் திருப்பமாக ஒரு வீடியோ காட்சி வெளியானது.

கோகுல்ராஜ் இறப்பதற்கு முன் பேசி பதிவாகியுள்ளதாக கூறப்படும் அந்த வீடியோ 30 வினாடி ஓடுகிறது. “எல்லாரும் பொய்யா பழகுறாங்க. யார்கிட்டயும் ஒழுங்கா பழகாதீங்க. எல்லாம் லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஏமாத்திடுறாங்க. இனியும் இந்த பொய்யான உலகத்துல இருக்க பிடிக்கல. நான் என் அப்பா இருக்க இடத்துக்கே போறேன். என்ன பார்த்தாவது எல்லாரும் திருந்திக்கோங்க. இந்தமாதிரி பொய்யான பொண்ணுங்களை நினைச்சி வேஸ்ட்டா வாழ்க்கையை வீண் பண்ணிடாதீங்க அப்புறம் என்னோட முடிவுதான் உங்க எல்லாத்துக்கும்” என்று பதற்றமும், உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பேசுவதாக உள்ளது.

மிரட்டல் மற்றும் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு பேசுவது போல் உள்ளதாகவும், வழக்கை திசை திருப்பும் நோக்குடன் கொலையாளிகள் இந்த வீடியோவை தயாரித்து வெளியிட்டதாகவும் கோகுல்ராஜ் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கையை டி.எஸ்.பி.யிடம் மருத்துவமனை வழங்கியுள்ளது.

மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில், கோகுல்ராஜ் மரணம் தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கோகுல் ராஜின் மரணம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓமலூரில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த கோகுல்ராஜ் உறவினர்கள் உள்பட 50 பேரும் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

மேலும், கோகுல் ராஜ் உடலை பெற்றுக்கொள்ளவும் அவர்கள் சம்மதித்துள்ளனர். இதையடுத்து, நாளை கோகுல்ராஜ் உடல் தகனம் செய்யப்படுகிறது.

தலித் இளைஞர் கோகுல்ராஜ் தற்கொலை வழக்கு கொலை வழக்காக பதிவு: 6 பேர் கைது


 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Keladi Kanmani Sun Tv Serial 01/07/15 Episode 73 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Azhagi Sun Tv Serial 01-07-15 - Episode 933A Discussion on Suicides Related to Love Affairs-Makkal Medai (01/07/2015)


Chettinad Chicken Kulambu Recipe in Tamil

 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vaani Rani 01-07-15 Sun Tv Serial Episode 691


Alli Malarum Adhikaalai - Award Winning Tamil Short Film 2015


Dharmapuri Ilavarasan's 2nd Anniversary - Im Not Able to Perform the Rituals - Ilavarasan's Father

Moondru Mudichu 01-07-15 Polimer Tv Serial Episode 906


Puli Teaser Sets One More Records | Vijay, Chimbu Devan, Shruti Haasan, Hansika


Vedivelu Latest All Comedy ScenesPLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kula Deivam 01-07-2015 Episode 45 Sun Tv Serial

 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS NEWS HAPPY WATCHING

Sun Tv Evening News 01-07-15


Vijay Tv Show Super Singer 5 01-07-15


Sivakarthikeyan's New Project Launch | P. C. Sreeram, Anirudh, Resul Pookutt


Double Meaning Jokes Is Unavoidable In Movies But It's Not the Only Form of Comedy - Vivek


I am Too Happy After Marriage Breakup-Trisha Open Talk