எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்தில் முருகதாஸ் இயக்குனர் முருகதாஸாகவே ஒரு காட்சியில் தோன்றினார். இப்போது சிஷ்யனின் முறை.

முருகதாஸ் தமிழ், தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கிய வேடம் தந்துள்ளார். யட்சன், இறைவி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு பெரிய வாய்ப்பு இது.

முன்பு பல படங்களில் நான் நாயகனாக நடித்திருந்தாலும் இப்போதுதான் என்னை ஒரு முழுமையான நடிகராக உணர்கிறேன் என கூறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

100 சதவீதம் உண்மை.

குருவை இயக்கும் சிஷ்யர் ஏ.ஆர்.முருகதாஸ்சிகா வைரஸ் பரவும் ஆபத்துக் காரணமாக பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்கவேண்டுமா அல்லது ரியோ டி ஜெனெரோ நகரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமா என்பதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கூட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிகா வைரஸ் மூலம் உலக பொது சுகாதாரத்துக்கு தெளிவான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு ஆலோசனை சொல்வதற்கான சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கும்படியும் அவர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

முன்னதாக அட்லாண்டாவிலிருந்து இயங்கும் நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் பிரேசிலில் ஏற்பட்டிருக்கும் சிகா வைரஸ் பரவல் என்பது ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் அளவுக்கு பெரியதொரு ஆபத்தாக உருவாகவில்லை என்று கூறியிருந்தார்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு சிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் மூளை கடுமையாக பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சிகா வைரஸ்: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க கோரிக்கைஅஜித்தின் 57 -வது படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க சிவா இயக்குகிறார்.

படத்துக்கான சிறப்புப் பக்கத்தை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று மாலை 5.7 மணிக்கு தொடங்குவதாக சத்யஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு காரணமாக ரசிகர்கள் ஆவலுடன் சிறப்புப் பக்கத்தை காண காத்திருந்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி எந்தப் பக்கமும் தொடங்கப்படவில்லை. அதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், சிறப்புப் பக்கத்தை வெளியிடுவதாக அறிவித்த சத்யஜோதி ஃபிலிம்ஸே, தல 57 படத்திற்கான புதிய பக்கம் வேறொரு நாளில் தொடங்கப்படும் என்று அறிவித்தது. மேலும் ரசிகர்களை காக்க வைத்ததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் இந்த படத்தை பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

ஆரம்பமே குழப்பம்... அஜித் ரசிகர்களை ஏமாற்றிய தயாரிப்பு நிறுவனம்ஜுலை மாதம் புகழ்பெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிட, கர்மா என்ற தமிழ்ப் படம் தேர்வாகியுள்ளது.

அத்துடன் சிறந்த வெளிநாட்டுப்பட இயக்குனர் பிரிவில் போட்டியிடவும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்மா படத்தை விளம்பரப்பட இயக்குனர் அரவிந்த் ராமலிங்கம் இயக்கியுள்ளார். ஒரு கொலையை மையப்படுத்திய த்ரில்லர் படம் இது. ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு க்ரைம் ரைட்டர் என இரண்டே கதாபாத்திரங்கள். ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற இப்படம் மேட்ரிட் திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருப்பதும், சிறந்த வெளிநாட்டு இயக்குனர் பிரிவில் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் கௌரவம்.

ஜுலை 4 -ஆம் தேதி கர்மா மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் ஒரே தமிழ்ப் படம் இது.

மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாசில படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி நம்மை கவரும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று, நேற்று வெளியான உறியடி.

மைம் கோபி தவிர இந்தப் படத்தில் நடித்தவர்கள், உருவாக்கியவர்கள் அனைவரும் புதிது. தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் நான்கு மாணவர்கள், மதுவும், மாதுவுமாக இருக்கும் ஊர் பெரியவரின் மகன்.

இவர்கள் இருவருக்குமிடையேயான உரசல். தாபா நடத்தும் உள்ளூர் முதலாளி சாதியை வைத்து அரசியல் செய்யும் சாணக்கியத்தனம் என்று உறியடி பயணிக்கிறது.

சாதி அரசியல் எப்படி சமூகத்தில் வேர் பிடிக்கிறது, சாதி கலவரத்தை தூண்டி எப்படி அரசியல் ஆதாயம் அடைகிறார்கள், சாதி அரசியல் எப்படி மாணவர்களிடையே திணிக்கப்படுகிறது என்பதை உயிரோட்டமாக சொல்கிறது உறியடி. படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம்.

விஜயகுமார் என்ற இளைஞர் படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார். ரசிகர்கள் இதுபோன்ற முயற்சிகளை திரையரங்கில் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.

உறியடி நமக்கான படம்.

உறியடி... பார்க்க வேண்டிய படம்சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவதற்கான குறைந்த கட்டண விமான சேவையை ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.


தென்னிந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் சென்னை-சிங்கப்பூர், அமிர்தசரஸ்-சிங்கப்பூர் இடையே விமான போக்குவரத்தைக் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல ரூ.5500 என்ற குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதால் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களுக்கும் இந்தச் சேவையை நீடிப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி பாரத் மகாதேவன் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூர்-சிங்கப்பூர் இடையே வரும் அக்டோபர் மாதம் இதே போன்ற சேவை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல் போயிங் டிரீம் லைன் விமானத்தை தங்கள் நிறுவனம் இயக்குவதால் ஒரே நேரத்தில் 300 பயணிகள் வசதியாக பயணிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் செல்ல இனிமேல் இந்த கட்டணம் போதும்!கரூரில் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலில், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அடையார் ஆனந்தபவன் என்ற உயர்தர சைவ ஹோட்டலில் இன்று காலை திருச்சியை சார்ந்த வழக்கறிஞரும், உதவி அரசு வழக்கறிஞருமான ரவி தனது குடும்பத்துடன் கரூரில் உள்ள இந்த உணவகத்தில் உணவு அருந்தியுள்ளனர்.

அப்போது, அவர்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளில், சாம்பாரில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. நீதிபதி அதுவும் பெண் நீதிபதி உணவிலேயே பூச்சி இருப்பதாகவும், அந்த பாதிக்கப்பட்ட அரசு உதவி வழக்கறிஞர் ரவியிடம் ஹோட்டல் நிர்வாகத்திடம் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

பின்னர் வாக்குவாதம் நீடித்த நிலையில் செல்பேசி வழியாக அனைத்து துறைகளுக்கும் புகார் தெரிவித்து அவர்கள் குடும்பத்துடன் திருச்சிக்கு காரில் புறப்பட்டனர்.


இதையடுத்து கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு ஹோட்டலின் உணவுகளை பற்றி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களை, அடையார் ஆனந்தபவன் கரூர் மேலாளர் இசக்கி சமாதானப்படுத்தி அனுப்பினார்.

கரூரில் உள்ள உயர்ரக சைவ ஹோட்டலான அடையார் ஆனந்தபவன் ஹோட்டலில் நடந்த இச்சம்பவம் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் உணவில் புழு பூச்சிஇது நம்ம ஆளு படத்துக்கு விகடன் மார்க் 100- க்கு 50 என விகடன் ட்விட்டர் பக்கத்தில் போடப்பட்டிருந்ததைப் பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு ஒரே குஷி.

தமிழகமே ஒரு படத்தை கொண்டாடினால்தான் விகடன் மதிப்பெண் 45 -ஐ தாண்டும். நம்ம சிம்பு படத்துக்கு ஐம்பதா என்று ஆவென்று ஆச்சரியப்பட்டவர்களுக்கு அது விகடனின் வழக்கமான குறும்பு என்று தெரியவில்லை.

பாக்யராஜ் நடிப்பில் முன்பு வெளிவந்த, இது நம்ம ஆளு படத்துக்கு விகடன் அப்போது அளித்த மதிப்பெண், 50. அதைத்தான் டைமிங்காக இப்போது போட்டு சிம்பு ரசிகர்களை முட்டாளாக்கியது.

இவங்க விளையாட்டுக்கு ஒரு அளவேயில்லையா.

இது நம்ம ஆளு - மார்க் போட்டு சீட்டை கிழித்த விகடன்நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியடைந்தது.

அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தே டெபாசிட்டை இழந்தார். தேர்தலில் அடைந்த படுதோல்வியில் இருந்து கட்சி மீளமுடியாத நிலையில். சொத்துக்களையும், நகைகளையும் அடகு வைத்து தேர்தலை சந்தித்த தேமுதிக வேட்பாளர்கள் தற்போது அனைத்தையும் இழந்து விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தோல்வியடைந்த வேட்பாளர்களை சந்தித்து வரும் விஜயகாந்த் அவர்களின் தோல்விக்கான காரணங்களை கேட்டு வருகிறார்.

தோல்விக்கான காரணமாக அவர்கள் வைக்கும் முதன்மை காரணம் மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்திருக்க கூடாது என்பதாகும். மேலும் இந்த தேர்தலில் போட்டியிட தாங்கள் நகைகளை எல்லாம் அடுகு வைத்து, தற்போது அனைத்தையும் இழந்து நிற்பதாக புலம்பி உள்ளனர்.

இதனையடுத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு பண உதவி செய்யப்படும் என விஜயகாந்த் கூறியதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வரும் ஜூன் 5-க்குள் தாங்கள் செலவு செய்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும், அதற்காக யாரும் வேறு கட்சிக்கு செல்ல வேண்டாம். இதே கட்சியில் தொடர்ந்து இருங்கள் என விஜயகாந்த் உருக்கமாக கேட்டுக்கொண்டதாக கூறுகின்றனர்.

கட்சி மாற வேண்டாம்; பணம் தருகிறேன்: கெஞ்சும் விஜயகாந்த்புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்க உள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் சமூக ஆர்வலருமான கிரண்பேடி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலோடு சேர்ந்து சமூக பணியில் ஈடுபட்டவர். 2015ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் முறை தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்து கிரண்பேடி பாஜக சார்பில் களம் இறங்கினார். ஆனால் கிரண்பேடி தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், அவர் புதுச்சேரியின் துணை ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்கும் விழா நாளை மாலை 6.30 மணிக்கு புதுச்சேரியில் கவர்னர் மாளிகையில் நடக்கவுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.

அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாரு நடிகர்கள் ரஜினிகாந்த மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அந்த விழாவில் கலந்து கொள்கிறார்களா என்பது பற்றி தெரியவில்லை.

கிரண்பேடி பதவியேற்பு விழா : ரஜினி - விஜய்க்கு அழைப்புநடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சீனிவேல் இவர் கடந்த 25-ஆம் தேதி சட்டசபை உறுப்பினராக பதவியேற்கும் முன்னரே உடல்நல குறைவால் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

இந்த இடைத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் இந்த தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் வாங்க முடியாமல் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட விஜயகாந்த், இடைத்தேர்தலில் களம் இறங்கி ஆளுங்கட்சியை எதிர்த்து வெற்றிபெறுவது கொஞ்சம் இல்லை ரொம்ப கடினமே.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார் விஜயகாந்த்?புதுச்சேரி முதல்வராக இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. ஆனால் யார் முதலமைச்சர் என்ற இழுபறி ஒருவார காலமாக நீடித்து வந்தது. புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி, நமச்சிவாயம், வைத்திலிங்கம் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ஷீலா தீட்சித் மற்றும் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் முதல்வராக அறிவிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்ற கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதி அருகே நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் காங்கிரஸ் கொடியை கிழித்தும் போர்ரட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அரசு பேருந்துகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினார். இதனால் புதுச்சேரியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நாராயணசாமிக்கு எதிர்ப்பு: நமச்சிவாயம் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம்நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழக அரசியல் களம் சற்று ஆரோகியமான பாதையில் பயணிப்பது போல் இருந்தது. தமிழக மக்களும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றது, அவரின் வருகைக்கு ஜெயலலிதாவின் நன்றியும், அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஜெயலலிதா விளக்கம் அளித்தது, சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தது, ஜெயலலிதா திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியது, திமுக உடன் சேர்ந்து தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க இந்த அரசு எதிர்நோக்கி உள்ளது என ஜெயலலிதா கூறியது இவை எல்லாம் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வு.

இதன் மூலம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் நடைபெறும் என பரவலாக பொதுமக்கள் பேசி வந்தனர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்த ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்காது போல் உள்ளது.

32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழத்தில் ஒரு ஆளும் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் திமுகவின் முன் இருக்கும் சவால்கள் என்ன என கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக எந்த சவால்களையும் சந்திக்கும். தற்போது திமுகவை விட அதிமுகவுக்கு தான் சவால்கள் அதிகம். ஒரு எம்.எல்.ஏ மறைந்த பிறகு அதிமுகவின் பலம் தற்போது 130-ஆக உள்ளது. குறைந்த பட்ச பெரும்பான்மையை விட 12 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம்.

இந்த எம்.எல்.ஏ.க்கள் சலனப்படாமல் இருப்பதும், இவர்களைப் பத்திரமாக தங்களிடமே தக்கவைத்துக் கொள்ளுவதும் அதிமுகவின் முன்னுள்ள சவால். இது மெல்லியதோர் கயிற்றின் மீது நடப்பது போன்றது என பதில் அளித்தார் கருணாநிதி.

திமுக தலைவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி திமுக ஆட்சியமைக்க முயற்சிக்கும் என பொருள் கொள்ள வைக்கிறது திமுக தலைவரின் இந்த கருத்து.

அதிமுக எம்.எல்.ஏ.க்களை சலனப்படாமல் தக்க வைத்திருக்க வேண்டும் என கருணாநிதி கூறியிருப்பது நிச்சயமாக ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தாகும். இதற்கு ஜெயலலிதா பதிலடி கொடுக்கும் பட்சத்தில் அது தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது.

குதிரை பேரம் நடத்தி ஆட்சியை பிடிக்க திமுக திட்டம்?: கருணாநிதியின் சூட்சம பேட்டி

Kelvi Kanaikal –Interview with Thol. Thirumavalavan, President of VCK


Rangaraj Pandey Interview : My challenging interveiws are with Modi, Vaiko..| Biography


Vijay Tv Show Kings of Dance 28-05-16Galatta Review - Idhu Namma Aalu | STR | Nayantara | Andrea
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Free Watch Sun Tv Morning News At www.techsatish.net,Sun Tv Morning News -Cast,Titlesong,Mp3
Sun Tv Morning News Watch Online At www.techsatish.net
Sun Tv Morning News , Sun Tv Morning News Today,Sun Tv Morning News Wiki,Sun Tv Morning News ,Sun Tv Morning News Watch,Sun Tv Morning News Online,Watch Sun Tv Morning News Online,Sun Tv Morning News YouTube,Sun Tv Morning News,Sun Tv Morning News ,Sun Tv Morning News ,Sun Tv Morning News tamil News,Sun Tv Morning News

Sun Tv Evening News 28-05-2016
Puthiya Thalaimurai Nerpada Pesu 28-05-16

Puthiya Thalaimurai Nerpada Pesu 28-05-16


(28/05/2016) Kelvikkenna Bathil : Exclusive Interview with PMK Leader Anbumani Ramadoss(28/05/2016) Ayutha Ezhuthu Neetchi : Debate on HC's New Disciplinary Rules for Lawyers(28/05/2016) Ayutha Ezhuthu : EC cancels Polls - Necessary..? or Contempt..?

 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Chinna Papa Periya Papas 28-05-2016 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Vaani Rani 28-05-16 Sun Tv Serial Episode 962 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Kanchana 28-05-16 Raj Tv Serial Episodse 217
 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Priyamanaval Sun Tv Serial 28-05-16 - Episode 411


The top 10 most deadly hackers in the world | Latest Tamil NewsUdhaynidhi Stalin makes fun of Vaiko and Lakhani through memes | Latest Tami NewsSurya Reveals About Jhothika Dream In Audio LaunchVijay & Sivakarthikeyan is my Next Target - Successfull Heroine Miruthula Wish"Rajini is my Competition" - Powerstar Controversial speech about Rajini


Vamsam 28-05-2016 - Sun Tv Serial Episode 882